News September 1, 2025

‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

image

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முக்கிய அறிவிப்பை நாளை முற்பகல் 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், திரைக்கு வருவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த நிலையில், நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

Similar News

News September 4, 2025

நோட் புக்ஸ், பென்சில், ரப்பருக்கு வரி இல்லை

image

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி கிடையாது. இதுவரை மேப், சார்ட், பென்சில், கிரேயான்ஸ், ஷார்ப்னர், நோட் புக்ஸ் ஆகியவை 12% ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்தன. இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு இவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டுள்ளது. அதே போல 5% வரி வரம்பில் இருந்த ரப்பருக்கும் இனி வரி கிடையாது.

News September 4, 2025

Health Insurance-க்கு வரி இல்லை

image

புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உடல்நலம், மருத்துவம் சார்ந்த துறைக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹெல்த் & லைஃப் இன்ஷூரன்ஸ்-க்கு 18% ஆக இருந்த வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. தெர்மோமீட்டர், மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன், அனைத்து நோயறியும் கருவிகள் & ரீ-ஏஜண்ட்கள், குளூக்கோமீட்டர் & டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ், பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண்ணாடி ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

ராசி பலன்கள் (04.09.2025)

image

➤ மேஷம் – செலவு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – அனுகூலம் ➤ கடகம் – முயற்சி ➤ சிம்மம் – கவலை ➤ கன்னி – யோகம் ➤ துலாம் – ஏமாற்றம் ➤ விருச்சிகம் – மேன்மை ➤ தனுசு – அன்பு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – அமைதி ➤ மீனம் – போட்டி.

error: Content is protected !!