News September 1, 2025
கிரிக்கெட்டில் அஸ்வினின் அடுத்த பயணம்

துபாயில் நடைபெறும் ILT20 போட்டிகளில் அஸ்வின் விளையாடவுள்ளார். சமீபத்தில் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ILT20 தொடரில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். இதில் விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்க அஸ்வினை பல அணிகள் அணுகியுள்ளன. அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ILT20-ல் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, யூசப் பதான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். டிசம்பர் 2-ம் தேதி ILT20 தொடங்குகிறது.
Similar News
News September 1, 2025
கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள் கூறியதால் OPS இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் OPS தரப்பு 10 சீட்கள் வரை கேட்பதாகவும், கூட்டணி உறுதியான பின் மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.
News September 1, 2025
மெகா கூட்டணிக்கான ப்ளானில் EPS.. விரைவில் அறிவிப்பு?

அதிமுக கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் இம்மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்த EPS திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதற்காக கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட விருந்து கொடுக்கும் ப்ளானில் உள்ள EPS, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளையும் அங்கு அழைத்து, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தனித்தனி டீம் அமைத்துள்ளாராம். உருவாகுமா மெகா கூட்டணி?