News September 1, 2025
புதுவையில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் மேக வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க எச்சரிக்கை வீடுகளை விட்டு வெளியேறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
புதுச்சேரி: முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு தெற்கு பகுதிகளில், தூண்டில் முன் வளைவு அமைக்க வலியுறுத்தி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதை பரிசினை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
News September 3, 2025
புதுவை ஜிப்பர் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

புதுவை, மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு புதுச்சேரி மாநில ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..!
News September 3, 2025
புதுச்சேரியில் மது கடைகள் மூட உத்தரவு!

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.