News August 31, 2025
தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ்(TT) அணி முதல் தோல்வியை தழுவியது. யு மும்பை அணிக்கு எதிரான மோதலின் முதல் பாதியில் TT அணி 14-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் கடைசி 10 நிமிடங்களில் முன்னிலையை தக்க வைக்க தவறியதால் 36-33 என்ற கணக்கில் யு மும்பை வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜூன் தேஷ்வால் 12 புள்ளிகள் எடுத்தார். TT தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.
Similar News
News September 5, 2025
போட்டியிடும் தொகுதியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு மத்தியிலும் பிஹார் தேர்தல் களம் பரபரப்புடனே காணப்படுகிறது. அந்த வகையில், ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர், கார்காஹர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால், இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகள் கவனமுடன் தேர்ந்தெடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தொகுதியானது, பிரசாந்த் பிறந்த தொகுதி ஆகும்.
News September 5, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.
*சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை.
*எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல,
ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.
*சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
News September 5, 2025
மகளிர் உலகக் கோப்பையில் ஸ்ரேயா கோஷல்

செப்.30-ல் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் இப்போட்டியை சிறப்பாக கொண்டாட ICC திட்டமிட்டுள்ளது. இதன்படி, கவுஹாத்தியில் நடைபெறும் துவக்க விழாவில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் லைவ் பெர்ஃபார்மன்ஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரே ‘Bring it Home’ என்ற இத்தொடருக்கான பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. என்ன ரெடியா?