News August 31, 2025
டிரம்ப்புக்கு என்னாச்சு?.. LATEST PHOTOS

டிரம்ப் இறந்துவிட்டார் என்று ஹேஷ்டேக்கில், 57,000 பதிவுகள் X-ல் போடப்பட்டுள்ளன. இது உண்மையல்ல என்று வெள்ளை மாளிகையும் டிரம்ப்பும் விளக்கம் அளித்தாலும், அவரின் உடல்நிலை பற்றி பல செய்திகள் உலா வருகின்றன. டிரம்ப்பின் லேட்டஸ்ட் photos-ஐ ஆய்வுசெய்த நெட்டிசன்கள், அவர் கைகளில் தழும்புகளும், அதை அவர் மேக்-அப்பால் மறைப்பதையும் பார்த்து, அவருக்கு தீவிர ரத்தநாள பாதிப்பு இருப்பதாக சொல்கின்றனர். எது உண்மை?
Similar News
News September 5, 2025
ஒரு இனத்துக்கே சுயமரியாதை ஊட்டியவர் பெரியார்: CM

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, CM ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு, இங்கு திறக்கப்பட்ட படம்தான் உதாரணம் என தெரிவித்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து சுயமரியாதையை பரப்பியவர் பெரியார் என்றும் ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர் அவர் எனவும் CM கூறியுள்ளார்.
News September 5, 2025
தமிழகம் முழுவதும் இன்று இந்த கடைகள் இயங்காது

மிலாடி நபி பண்டிகையையொட்டி இன்று(செப்.5) மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள், பார்கள் இன்று செயல்படாது. மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டால், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறையாகும். SHARE IT.
News September 5, 2025
Health: புடவை கட்டுபவர்களை பாதிக்கும் கேன்சர்!

புடவை உடுத்தும்போது, In-Skirt-ஐ மிகவும் இறுக்கமாக கட்டுகிறீர்களா? உஷார். தொடர்ந்து In-Skirt-ஐ ஒரே இடத்தில் இறுக்கி கட்டுவதால் அங்கிருக்கும் தோல் புண்ணாகும். Frictional Dermatoses என அழைக்கப்படும் இந்த புண்ணை கவனிக்காமல் விட்டால் Skin Cancer ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, In-Skirt-ஐ கட்டும்போது இறுக்கி கட்டவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. SHARE.