News August 31, 2025
BREAKING பரமக்குடி: கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின்குமார்(10) இன்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் மாலை நேரத்தில் கால் கழுவ சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் கண்மாயில் தேடினர். பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் சிறுவனை உடலை கண்மாயிலிருந்து மீட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 5, 2025
இராமநாதபுரம்: மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த அஜீஸ்பாய் தமிழர் அதிகாரம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழர் அதிகாரம் கட்சியின் தலைவர் அழகர் சாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில கொள்கை பரப்பு செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 4, 2025
இராமநாதபுரம்: ரயில் சேவையில் மாற்றம்

ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயில் (வ.எண்கள்: 22662/ 22661) & போட் மெயில் (வ.எண்கள்: 16752/16751) விரைவு ரயில் 10.9.2025 முதல் 11.9.2025 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும். எழும்பூர் ரயில் நிலையம் செல்லாது என தெற்கு ரயில்வே சென்னை போக்குவரத்து தலைமையகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News September 4, 2025
உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

உச்சிப்புளி என்மனங்கொண்டான் பகுதியில் உள்ள காமராஜர் நகர் டிரான்ஸ்பார்மரில் நேற்று (செப். 3) உச்சிப்புளியை சேர்ந்த லைன்மேன் தர்மன் என்பவர் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி லைன்மேன் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.