News August 31, 2025

தீபாவளி பரிசாக மாதம் ₹1,000.. விரைவில் அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களில், தகுதியானவர்கள் குறித்து தீபாவளிக்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் தகுதியானவர்களின் முதல் பட்டியல் வெளியாகும் எனவும், இவர்களுக்கு தீபாவளி பரிசாக வரும் அக்., 15-ம் தேதி முதல் கட்டமாக பணம் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News September 5, 2025

ரிலீஸுக்கு பின்பு புரமோஷன்? துல்கர் சல்மான் பதில்

image

கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘Lokah Chapter 1: Chandra’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், ரிலீஸுக்கு முன்பு சரியான புரமோஷன் செய்யாத படக்குழு, தற்போது பேட்டிகளை வாரி வழங்கி வருகிறது. இதுகுறித்து பேசிய பட தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இந்த வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இது இயற்கையாகவே கிடைத்தது என்று நெகிழ்ந்தார். நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News September 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 449 ▶குறள்: முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. ▶ பொருள்: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

News September 5, 2025

வலிமையுடன் இந்தியா – USA உறவு: பியூஷ் கோயல்

image

இந்தியா – USA இடையிலான உறவு என்பது மிகுந்த வலிமையுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா மீது USA 50% வரி விதித்தது பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பியூஷுன் கருத்து கவனம் பெற்றுள்ளது. ஒரு சில கருத்துகள் தற்காலிகமாகவே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக, புதிதாக 50 நாடுகளை இந்தியா அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!