News August 31, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (ஆக.,31) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 5, 2025
தேனி: பேச்சு போட்டியை அறிவித்த கலெக்டர்

2025-2026-ம் நிதியாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 09.09.2025 அன்றும், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி 10.09.2025 அன்றும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளது என்று தேனி கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT NOW
News September 5, 2025
தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 5, 2025
தேனி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதில் செப்.9 அன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT