News August 31, 2025
சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து?

சிக்கன் இறைச்சியை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்: உங்கள் எலும்புகளும் தசைகளும் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனநிலை சீராகும். அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி, இன்பெக்ஷன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.
Similar News
News September 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 5, 2025
தோனியின் கதவுகள் திறந்தே இருக்கும்: ப்ரேவிஸ்

தூங்கும் நேரத்தை தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் தோனியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று CSK வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில், தோனியின் எளிமை, சக வீரர்களுடன் அவர் செலவிடும் நேரம், அவரது குணம் ஆகியவை தன்னை பிரமிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார். 2025 IPL சீசனில், ப்ரேவிஸின் பங்கு சென்னை அணிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News September 5, 2025
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் No.1

NIRF தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதில் சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் 33 கல்லூரிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. 32 கல்லூரிகளுடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.