News August 31, 2025
சீன அதிபரை இந்தியாவிற்கு அழைத்த PM மோடி

சீனா சென்றுள்ள PM மோடி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சீன அதிபர் ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். தன்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்த சீன அதிபர், பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தும் இந்தியாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசினர்.
Similar News
News September 5, 2025
சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா?

நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை, மலையாளத்தில் வெளியான ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்க உள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘புறநானூறு’ படத்தில் நஸ்ரியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அப்படம் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.
News September 5, 2025
காவல் நிலைய மரணங்கள்.. SC எடுத்த முடிவு

நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் CCTV பொறுத்தப்படாததை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. கடந்த 8 மாதங்களில் 11 காவல் நிலைய மரணங்கள் அரங்கேறியதாக வெளியான அறிக்கையின்படி சுப்ரீம் கோர்ட் இந்த முடிவை எடுத்திருக்கிறது. 2020-ல் ஒரு வழக்கின் விசாரணையில் சுப்ரீம் கோர்ட் எல்லா காவல் நிலையங்களில் CCTV பொறுத்த உத்தரவிட்டது. எனினும் பல காவல் நிலையங்களில் இது நடைமுறையில் இல்லை.
News September 5, 2025
இளையராஜாவின் காப்பிரைட் விவகாரம்.. மிஷ்கின் கேள்வி

இளையராஜா தனது பாடல்களுக்கு காப்பிரைட் கேட்பது குறித்து மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பாடல்கள் தாய் பால் மாதிரி எனவும், இப்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் புதிதாக பாடல்களை போடாமல், இளையாராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இசை மேல் இருக்கும் மரியாதைக்காவது இசைஞானியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.