News April 9, 2024
விஷ்ணு விஷால், சூரி மீண்டும் இணைந்தனர்

சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக நீடித்துவந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. மிக நெருக்கமாக இருந்துவந்த நடிகர்கள் விஷ்ணு விஷாலுக்கும் சூரிக்கும் இடையே நிலம் வாங்கிக் கொடுப்பது தொடர்பான பிரச்னை எழுந்தது. விஷ்ணு விஷாலும் அவரது தந்தையும் தன்னை ஏமாற்றிவிட்டதாக சூரி 2020ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து தற்போது ஃபோட்டோ வெளியிட்டுள்ளனர்.
Similar News
News July 8, 2025
செல்வப்பெருந்தகை புனிதநீர் ஊற்ற அனுமதி மறுப்பு

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.
News July 8, 2025
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்: அமைச்சர் மறுப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல் என வரும் தகவலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்தார். CM ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் புதிதாக 44 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதாகவும், அங்கன்வாடியில் 7783 பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
News July 8, 2025
நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.