News August 31, 2025
ஈரோடு: FREE சோழீஸ்வரர் கோவிலில் இலவச திருமணம்

ஈரோடு, வைரபாளையம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT
Similar News
News September 3, 2025
பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொன்னால் பரிசு நிச்சயம்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தி வரும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெரிய சிறிய என 2 உணவகங்களுக்கு பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
ஈரோடு: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News September 3, 2025
மிலாது நபி – ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

மிலாது நபியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், எப்எல்2 மற்றும் எப்எல்3 மதுபான விடுதிகள், ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 5-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.இதை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.