News August 31, 2025

BREAKING: மதுரை வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

image

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை. 300 சவரன் நகையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்டதாக தெரிவித்து பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ததாக கூறி, பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

மதுரை ஆண் கருத்தடை சிகிச்சை முகாம்

image

இந்திய குடும்ப நலச் சங்கம் மற்றும் மாவட்ட குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும், ஆண்கள் கருத்தடை சிகிச்சை முகாம் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை எல்லிஸ் நகரில் அமைந்துள்ள FPAI மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது, இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், கருத்தடை சிகிச்சை மேற்கொள்வோர் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும் விவரங்களுக்கு 0452 2601905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 3, 2025

மூன்றாம் தரப்பு ஆப்கள் தவிர்க்கவும் – மதுரை காவல் துறை

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: மொபைல் மூலம் வங்கி தொடர்பான பண பரிவர்த்தனைகள் செய்யும்போது, உரிய வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு (third-party) ஆப்கள் மூலம் பணம் செலுத்துவது மோசடிக்கு வழிவகுக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சந்தேகம் ஏற்பட்டால் 1930 அழைத்து புகார் அளிக்கலாம்.

News September 3, 2025

மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

image

மதுரை வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் நாளை காலை 11 மணி முதல்
1 மணி வரை நடைபெறுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை உள்ள மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மின் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மின் செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!