News August 31, 2025

ஸ்ரேயஸின் திறமையே அவருக்கு சாபம்?

image

ஸ்ரேயஸிடம் கேப்டனாகும் தகுதி இருப்பதே, இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே தலைமை பொறுப்புகளுக்கு பல வீரர்கள் இருப்பதாகவும், அதனால் ஸ்ரேயஸ் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 2025 IPL-ல், 17 போட்டிகளில் 175 ஸ்டிரைக் ரேட்டில் 604 ரன்களை ஸ்ரேயஸ் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 4, 2025

பாஜகவில் அதிருப்தி? அண்ணாமலை புதிய விளக்கம்

image

பாஜக தலைமை மீது தான் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் களையப்படும் என்றார். மேலும், டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் சொந்த காரணங்களுக்காக தான் செல்லவில்லை எனவும், அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

US ஓபனில் இந்திய வீரர் அபாரம்

image

அமெரிக்க ஓபன் டென்னிஸில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆடவர் இரட்டையரின் காலிறுதியில் இந்த இணை ராஜீவ் ராம், நிக்கோலா மெக்டிக் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான ஆட்டத்தில் பாம்ப்ரி, வீனஸ் இணை 6-3,7-6,6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. யூகி பாம்ப்ரி கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றில் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

News September 4, 2025

உள்ளத்தை கொள்ளையடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

image

அழகால் வசீகரிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பச்சை நிறத்தில் சேலை உடுத்தி விதவிதமான போட்டோஸ் எடுத்து இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்துள்ளார். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய இவர், தற்போது ‘BRO CODE’, ‘ஆர்யன்’ படங்களில் நடித்து வருகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?

error: Content is protected !!