News August 31, 2025
டிரம்ப் இறந்துவிட்டார்?.. CLARITY

X-தளத்தில் <<17563319>>TRUMP IS DEAD<<>> என்ற ஹேஷ்டேக் இன்று உலகளவில் டிரெண்டானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் மாளிகை, டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும், விர்ஜீனியாவில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு போட்டோவையும் பகிர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே டிரம்ப் வெளியில் வராததால், அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுவிட்டனர்.
Similar News
News September 4, 2025
போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினேனா? MLA விளக்கம்

பஞ்சாபில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய விவகாரம் குறித்து <<17592849>>ஆம் ஆத்மி MLA<<>> ஹர்மீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் பொய்யான தகவலை கூறியதாகவும், தன்னை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாலேயே தப்பித்து சென்றதாகவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை கைது செய்ய முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
News September 4, 2025
ஐபிஎல்-ல் அமித் மிஷ்ராவின் தரமான 3 சம்பவம்

ஐபிஎல்-ல் அதிக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா ? இந்த சாதனைக்கு உரியவர் அமித் மிஷ்ரா. அவர் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். 2018-ல் ஐதராபாத் அணிக்கு எதிராகவும், 2011-ல் பஞ்சாப் அணிக்கு எதிராகவும், 2013-ல் புனே அணிக்கு எதிராகவும் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல ஐபிஎல்-ல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் 174 விக்கெட்களுடன் 8வது இடத்தில் உள்ளார்.
News September 4, 2025
ஐகோர்ட் விதித்த கெடு.. மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தினை வரும் நவ.30-க்குள் TN முழுவதும் அமல்படுத்த ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் 98.09% பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டதாகவும், திரும்ப பெறும் பாட்டில்களுக்கு ₹10 கூடுதலாக விற்பனை செய்ததன் மூலமாக ₹17.86 கோடி வசூலானதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது 15 மாவட்டங்களில் உள்ள இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமலாக உள்ளது.