News August 31, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், ஆப் மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறி, உங்களுடைய புகைபடங்களை பெற்று கொண்டு ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ்ஆப் மூலமாக ஏதேனும் லிங்க், மெசேஜ் வந்தால் அதனை லிங்க் செய்ய வேண்டாமென தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 3, 2025
புதுச்சேரியில் மது கடைகள் மூட உத்தரவு!

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News September 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரியாத நபர்களிடமிருந்தோ RTO E Challan என்கின்ற போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு லிங்க் ஒன்று அனைவருக்கும் பகிரப்படுகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று உங்களது தகவல்களை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும். ஆதலால் யாரும் இத்தகைய RTO E Challan என்ற லிங்க் ஐ தொட வேண்டாம்.
News September 3, 2025
புதுவையில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு

புதுவை, வருவாய் & பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் & பல் நோக்கு உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி புதுவை, காரைக்கால், மாகி & ஏனாம் பகுதிகளில் நடக்க உள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் & தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.