News August 31, 2025
இலவச சட்ட ஆலோசனை மைய சேவைகள் (2/2)

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு இலவசமாக ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர்களை பெறலாம். நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். இப்படி பல விஷயங்கள் உள்ளன. மறக்காமல் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News September 4, 2025
காஞ்சியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் “எழுதுக” எனும் நிகழ்ச்சி வரும் 6ம் தேதி சனி காலை 8.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன். இயக்குனர் பள்ளி கல்வித்துறை முனைவர் கண்ணப்பன் மற்றும் தலைமை விருந்தினராக. முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொள்கிறார்.
News September 4, 2025
காஞ்சிபுரம் இரவு ரோந்து பணி விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

மார்ச் 2013 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அழித்திட நடவடிக்கை செய்து உள்ளோம். இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாதவர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் 02.12.2025-க்குள் காஞ்சிபுரம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம்.