News August 31, 2025
சேலம் மாநகர் காவல்துறை – சிறுவர் வாகனம் ஓட்ட தடை!

சேலம் மாநகர் காவல்துறை சிறுவர் வாகன ஓட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியது. 18வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்/பாதுகாவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 12 மாதங்களுக்கு வாகன RC ரத்து, 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். சிறுவர்களுக்கு 25 வயது வரை உரிமம் வழங்கப்படாது. பொதுமக்கள் சாலை பாதுகாப்புக்காக இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
Similar News
News September 4, 2025
சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!
News September 4, 2025
சேலம்: பிரச்னையா..? CM Cell-ஐ அணுகவும்!

சேலம் மக்களே..,அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா..? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா..? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News September 4, 2025
சேலத்தில் தெரு நாய் கடித்து வாலிபர் பலி ?

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் (23) என்பவர் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் அதனால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல்.கடந்த சில நாள்களுக்கு முன் ரோபிஸ் தாக்கி சேலத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.