News August 31, 2025
தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட ஒழுங்கு டிஜிபி ஆக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், நிர்வாகப் பிரிவு டிஜிபி ஆக பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் ஜிவால் பணி கோப்புகளை வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தார். இவர் 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
Similar News
News September 4, 2025
தலையணையின் கீழ் இந்த 5 பொருள்களை வைத்தால்..

தூங்கும் போது தலையணையின் கீழ் இந்த 5 பொருள்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் எனர்ஜியும் தேடி வரும் என வாஸ்து நம்பிக்கை கூறுகிறது. 1) இரும்பு: பயத்தையும், கெட்ட கனவுகளையும் நெருங்க விடாது. 2) பூண்டு: நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும். 3) சதகுப்பி விதைகள்: ராகு தோஷத்தை போக்கும். 4) பச்சை ஏலக்காய்: ஆழ்ந்த உறக்கத்தை தரும். 5) கல் உப்புடன் ஒரு ரூபாய் நாணயம்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
News September 4, 2025
டாப் 5 பணக்காரர்களின் கல்வி தகுதி தெரியுமா?

உலகின் டாப் 5 பணக்காரர்களாக எலான் மஸ்க், லாரி எலிசன், மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ், லாரி பேஜ் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடிகளாக உள்ளது. ஆனால் இவர்களில் மூவர் மட்டுமே கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். மீதமுள்ள இருவர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்த டாப் 5 தொழிலதிபர்களின் கல்வி தகுதி, சொத்து மதிப்பு குறித்து மேலே உள்ள புகைப்படங்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 4, 2025
சற்றுமுன்: ஃபேஷன் உலகின் ஜாம்பவான் காலமானார்

ஃபேஷன் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஜார்ஜியோ அர்மானி(91) காலமானார். உலகளவில் பிரபலமான அர்மானி(Armani) நிறுவனத்தின் உரிமையாளரான இவர், 1934-ல் இத்தாலியில் பிறந்தவர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து இவர், போரில் தனது குடும்பத்தை பறிகொடுத்து குழந்தை பருவத்தில் பசியால் வாடியுள்ளார். பின்னர் தனது கடின உழைப்பால் ஃபேஷன் உலகை கட்டி ஆண்டவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP