News August 31, 2025

போர்க்கால நடவடிக்கை எடுங்கள்: விஜய்

image

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு விஜய் வலியுறுத்தியுள்ளார். தமிழக ஏற்றுமதியாளர்கள் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரோடும் தவெக துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சார்ந்த தொழில்களை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 3, 2025

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு நெருக்கடி.. தீவிர ஆலோசனை

image

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதனால், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்த நிலையில், SC-யின் தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை இன்று நடத்துகிறார்.

News September 3, 2025

மழைக்காலத்தில் இந்த ‘6’ பானங்களை குடிங்க!

image

பிடித்த சீசன் என்றாலும், மழைக்காலத்தில்தான் பல உடல்நல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இந்த காலங்களில் பெருகுவதால் கொசுக்கள் அதிகளவில் பெருகுவதால், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களும் மக்களிடையே பரவும். எனவே, மழைக்காலங்களில் நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிக அவசியமானது. அதனை பெற, மேலே உள்ள பானங்களை பருகுங்கள். இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். SHARE IT.

News September 3, 2025

BREAKING: கட்சி மாற்றம்? செங்கோட்டையன் பதில்

image

EPS-வுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜெ.,வின் தோழியான சசிகலாவை நான் சந்தித்து பேசவில்லை; தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று செங்கோட்டையன் பதிலளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு ( தவெக) மாறுகிறீர்களா என்ற கேள்விக்கு, 5-ம் தேதி பதில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!