News August 31, 2025

செங்கல்பட்டு: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

செங்கல்பட்டு மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News September 3, 2025

நம்மாழ்வார் விருது பெற அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது இந்த விருதினை பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். அக்ரிஸ்நெட் வலைதளத்தில், செப்15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி,விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

News September 3, 2025

மண் அள்ளுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

image

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏரியில் வண்டல் மற்றும் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மண் அள்ளுவதால் பருவமழையால் கிடைக்கும் அதிக நீரைத் தக்கவைக்கவும், நிலத்தடி நீரை பெருக்கி விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

News September 3, 2025

செங்கை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!