News August 31, 2025
விழுப்புரம்: அமைதியைத் தேடி ஆரோவில் செல்லலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில், வார இறுதிப் பயணத்திற்கு ஆரோவில் ஒரு சிறந்த தேர்வாகும். சர்வதேச நகரமான இங்கு, அமைதி (ம) ஆன்மிகச் சூழலை அனுபவிக்கலாம். இங்குள்ள பிரதான இடமான மாத்ரிமந்திர்-ஐ வெளியில் இருந்து பார்வையிடலாம், உள்ளே செல்ல முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். இது தவிர, இங்குள்ள பல்வேறு சர்வதேச அரங்குகள் மற்றும் சூழல் சார்ந்த அமைப்புகளைக் கண்டு ரசிக்கலாம். நண்பர்களுக்கு SHARE செய்து போய்ட்டு வாங்க!
Similar News
News September 4, 2025
விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
News September 4, 2025
விழுப்புரம்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.