News August 31, 2025
’Pookie’ வார்த்தை உருவான கதை தெரியுமா?

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ‘POOKIE’ என்ற வார்த்தை, 1900-களில் ஜெர்மன் மொழியில் குழந்தைகளை குறிக்கும் சொல்லாக இருந்திருக்கிறது. அப்போது பேமஸ் ஆகாத இந்த ‘Pookie’, 1960களில் வெளியான ‘Garfield’s teddy bear’ என்ற கார்ட்டூனில் இடம்பெற்றதால் அனைவராலும் அறியப்பட்டது. இதுதான் தற்போது செல்லப்பிராணிகள், மனதிற்கு பிடித்தவர்கள் மீது அன்பை வெளிப்படுத்தும் வார்த்தையாக மாறியிருக்கிறது. SHARE.
Similar News
News September 2, 2025
இளமையான தோற்றத்தை தரும் ‘புதினா தேநீர்’

புதினா தேநீர் அருந்துவது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். புதினா இலைகளை வெயிலில் உலர்த்தி, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இதை தேனுடன் கலந்து அருந்தினால், சரும பாதிப்புகளை வெகுவாக குறையும். புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். முகச் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் கிடைக்கும். SHARE IT.
News September 2, 2025
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த்

தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு உடனே வழங்க வலியுறுத்தி, காங்., MP சசிகாந்த் செந்தில் கடந்த 4 நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை, ராகுல் தொலைபேசி மூலமாகவும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் MP-க்கள் நேரிலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், தற்காலிகமாக உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
News September 2, 2025
தமிழக மீனவர்களுக்கு ₹1.45 கோடி அபராதம்

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 ராமநாதபுரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இவர்களுக்கு தலா ₹1.45 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் 18 மாத சிறை என தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர், மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.