News August 31, 2025
நாளை முதல் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி உள்ளிட்டவைகளின் விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இனி டீ – ₹15, பால் – ₹15, லெமன் டீ – ₹15, காபி, ஸ்பெஷல் டீ – ₹20, ராகி மால்ட் – ₹20, சுக்கு காபி – ₹20, பூஸ்ட் – ₹25, ஹார்லிக்ஸ் – ₹25 என பட்டியலிடப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் விரைவில் டீ, காபி விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
Similar News
News September 2, 2025
ஆப்கனுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், 15 டன் உணவுப் பொருள்கள், 1,000 டெண்ட்டுகளை இந்தியா நிவாரண உதவியாக ஆப்கனுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் தேவையான உதவிகள் அளிக்க தயார் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News September 2, 2025
விமர்சனம் கழுத்தை துண்டிக்க கூடாது: மிஷ்கின் வருத்தம்

திரை விமர்சனம் என்பது ஒரு கலைஞனின் கழுத்தை துண்டிப்பது போல் இருக்கக்கூடாது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். சினிமா விமர்சனங்கள் படங்களின் வியாபாரத்தை கெடுப்பதால், தயாரிப்பாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் மிஷ்கின் இவ்வாறு கூறியுள்ளார். இருப்பினும், விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. ▶குறள் எண்: 446 ▶குறள்: தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். ▶ பொருள்: அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.