News August 31, 2025

இபிஎஸ் மகனுடன் சசிகலா சீக்ரெட் மீட்டிங்?

image

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக ஒருங்கிணைப்புக்கான குரல் வலுத்துக்கொண்டே வருகிறது. இதில் தீவிரமாக இறங்கியிருக்கும் சசிகலா, அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் பேசிவந்தாராம். ஆனால் EPS எதற்கும் அசைந்துகொடுக்காததால், தற்போது அவரது மகன் மிதுனிடமே பேச்சுவார்த்தையை அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு எதிர்பார்க்கலாமா? உங்கள் கருத்து?

Similar News

News September 4, 2025

மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை IIT

image

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, PSG கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.

News September 4, 2025

தொலைநோக்கு பார்வையுடன் GST வரி மாற்றம்: EPS

image

GST வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும் PM மோடி கொண்டு வந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் என EPS பதிவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் வரி மாற்றம் முன்னேற்றத்தை உறுதி செய்யும் எனவும் EPS குறிப்பிட்டுள்ளார். வரி குறைப்பால், மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

News September 4, 2025

BREAKING: கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ஓய்வு

image

சுழற்பந்து வீச்சில் தனக்கென தனி இடம் பிடித்த அமித் மிஸ்ரா அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதாகும் அமித் மிஸ்ரா, இதுவரை 22 டெஸ்ட், 36 ODI மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அமித் மிஸ்ரா டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட IPL அணிகளிலும் விளையாடி விக்கெட்களை குவித்துள்ளார்.

error: Content is protected !!