News August 31, 2025
‘கூலி’ ரிலீஸ் தேதி தெரியுமா?

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி அமேசான் OTT-ல் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படம் ₹500 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Similar News
News September 4, 2025
கூட்டணியில் இருந்து டிடிவி விலக என்ன காரணம்?

அதிமுகவுடன் கூட்டணி அமைந்த பிறகு, இபிஎஸ் அழுத்தம் காரணமாக NDA கூட்டணியில் இருந்த டிடிவிவை, பாஜக கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட அவர், மோடி, அமித்ஷாவின் தமிழக வருகையின்போதும், அண்மையில் மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லையாம். குறிப்பாக, EPS மதுரை சுற்றுப்பயணம் அவரை அதிகளவில் கோபப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News September 4, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மீலாது நபியை முன்னிட்டு, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை (இன்று இரவு 10 மணி முதல் 6-ம் தேதி மதியம் 12 மணி வரை) மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி, மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
நாளை காத்திருக்கும் கோலிவுட் ட்ரீட்!

✦மதராஸி: SK-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவானதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது.
✦Ghaati: ‘வானம்’ கிரிஷ் இயக்கத்தில், அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகான, கம்பேக் படம் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த படங்களுடன் வெற்றிமாறன் தயாரித்த ‘Bad Girl’, KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’, ‘Conjuring Last Rites’ ஆகிய படங்களும் ரிலீசாகின்றன. நீங்க முதலில் எந்த படம் பாக்க போறீங்க?