News August 31, 2025

புதிய தாழ்வு தளப் பேருந்துகளின் வழித்தடங்கள்!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்திற்கு தாழ்வு தளப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.அந்த பேருந்துகள் இயங்கும் வழித்தடங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன. சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்திலிருந்து இராசிபுரம், தின்னப்பட்டி, தாரமங்கலம், வேம்படிதாளம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் எல்எஸ்எஸ் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது. இப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Similar News

News September 17, 2025

கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் !

image

சேலம் கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையினை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.492.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News September 17, 2025

சேலம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

சேலம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

News September 17, 2025

சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சேலம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 17) மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!