News August 31, 2025
77,545 மனுக்களில் 23,716 மனுக்கள் தீர்வு – ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் கடந்த 15-7-2025 முதல் 29-8-2025 வரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் வாயிலாக 77,545 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 23,716 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய மனுக்களின் மீது வருவாய் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி கலைஞர் உரிமை தொகைக்காக 87,212 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம் !

சேலம் கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனையினை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்து பார்வையிட்டார். தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.492.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
சேலம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

சேலம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சேலம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 17) மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.