News April 9, 2024
மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மோடி

பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
Similar News
News April 24, 2025
AI ஸ்மார்ட் கூலிங் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்

Ray-Ban Meta ஸ்மார்ட் கிளாஸ்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. AI வசதி, பார்க்கும் இடங்களில் உள்ள எழுத்துக்களின் மொழிபெயர்ப்பு, மியூசிக் ப்ளேயர் கண்ட்ரோல், இன்ஸ்டா, வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்ட பல வசதிகளை இதில் பயனர்கள் பெறலாம். வெறும் ‘Hey Meta’ என்று சொல்வதின் மூலம் இத்தனை வசதிகளையும் நீங்கள் பெறலாம். கடந்த 2023-ல் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
News April 24, 2025
இன்று இரவே ஆட்டத்தை ஆரம்பிக்கும் இந்தியா?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தி அதிரடி காட்டிய இந்தியாவின் நடவடிக்கையை, போராக பார்ப்பதாக பாகிஸ்தானும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், இன்று இரவே கூட இந்தியா தாக்குதலை தொடங்கலாம் என Geopolitical கருத்தாளர்கள் சிலர் கணிக்கின்றனர்.
News April 24, 2025
இந்தியா எப்படி தாக்குதல் நடத்தும்? (1/2)

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)