News August 31, 2025

இல.கணேசன் குடும்பத்தினருக்கு EPS ஆறுதல்

image

மறைந்த கவர்னர் இல.கணேசன் குடும்பத்தினருக்கு EPS நேரில் ஆறுதல் கூறினார். கடந்த 15-ம் தேதி உடல்நலக்குறைவால், நாகாலாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் காலமானார். அப்போது, தேர்தல் பரப்புரையில் இருந்ததால், EPS நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால், இன்று(ஆக.31) சென்னையில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Similar News

News September 4, 2025

டிடிவி கருத்துக்கு பதிலளிக்காத செங்கோட்டையன்

image

பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகளை மீண்டும் ஒன்றிணைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், ஜெ., தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்று கூறிவிட்டு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இந்நிலையில், அவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன், TTV மனதில் எதை வைத்து அப்படி சொல்கிறார் என எனக்கு தெரியாது என கூறிவிட்டு காரில் வேகமாக சென்றுவிட்டார்.

News September 4, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

கடந்த 9 நாளாக தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹78,360-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,795-க்கும் விற்பனையாகிறது. கடந்த 9 நாள்களில் தங்கம் விலை ₹4,000 அதிகரித்த நிலையில், இன்று வெறும் ₹80 மட்டுமே குறைந்துள்ளது

News September 4, 2025

போன் கேலரியில் ஆதார் Save பண்றீங்களா.. உஷார்!

image

ஆதார் & பான் கார்டு போட்டோஸை Phone gallery, சேமித்து வைக்க வேண்டாம் என புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ரக்ஷித் டாண்டன் தெரிவித்துள்ளார். Hack Proof உச்சி மாநாட்டில் பேசும் போது, இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை Digilocker-ல் சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பல App-களும் Install பண்ணும் போது, Gallery access-ஐ பெறுவதால், அது பாதுகாப்பானது இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார். SHARE IT.

error: Content is protected !!