News August 31, 2025

BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

image

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Similar News

News September 4, 2025

திருவள்ளூர் அருகே குழந்தை உயிரிழப்பு

image

திருவள்ளூர், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் சுபாஷினி, 1 வயதில் ஜெய்கிருஷ் என்ற குழந்தைகள். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஜெய்கிருஷ், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

News September 4, 2025

திருவள்ளூர் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!