News August 31, 2025
புதுவை மக்களுக்கு சீனியர் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி மக்களுக்கு சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுதுள்ளார். அதில், ஆன்லைனில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால், அதனை நம்பி தர வேண்டாம் எனவும், அதனை மீறி அவர்களிடம் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து அதன் மூலம் சைபர் மோசடி நடந்ததால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள்<
News September 4, 2025
புதுச்சேரி மக்களே வங்கியில் பணம் இருக்கா? உஷார்!

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரிந்த நபர்களிடமிருந்தோ YONO SBI என்ற APK லிங்க் ஆனது பரிமாறப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று பதிவுகளை பதிவிட்டாலோ தரவுகள் திருடப்பட்டு வங்கியில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும். அதனால் யாரும் இவ்வாறு வரக்கூடிய லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்து உள்ளனர். SHARE IT NOW
News September 4, 2025
புதுச்சேரி: முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு தெற்கு பகுதிகளில், தூண்டில் முன் வளைவு அமைக்க வலியுறுத்தி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதை பரிசினை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.