News August 31, 2025
விக்கிரவாண்டி: நாளை முதல் சுங்ககட்டணம் உயர்வு

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே அமைந்துள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப்.1 (திங்கள்கிழமை) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது. கார்/வேனுக்கு ஒருமுறை சென்று திரும்பி வருவதற்கு ரூ.155 பதில் ரூ.160 வசூலிக்கப்படும்.
Similar News
News September 1, 2025
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு வழங்கினார்கள்

விழுப்புரத்தில் இன்று (செப்.01) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுவாக வழங்கினார்கள். இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 1, 2025
தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. எம்எல்ஏ ஆர். அருள், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 9 பேரும் கூடி அன்புமணி மீதுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதது குறித்து விவாதித்து, அறிக்கை தயார் செய்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 1, 2025
விழுப்புரம்: 12th Pass போதும், ரூ.81,000 சம்பளம்!

விழுப்புரம் மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <