News August 31, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் தாசம்பட்டி சாம்பல் பட்டி இடையில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதன்படிஈரோட்டில் புறப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது 1ம் தேதி 2ம் தேதி வரை மொரப்பூர் வரை மட்டுமே இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மொரப்பூரிலிருந்து 3.47க்கு புறப்படும் என தகவல்
Similar News
News September 4, 2025
சேலம்: குழந்தைத் தொழில் 1098 உடனே புகார்!

சேலம் மாவட்ட காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்கள் சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து குழந்தை கல்வி கற்கும் திறமையை வளர்க்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். குழந்தை தொழிலாளர் வைத்திருந்தால் 1098 புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுத்து குழந்தையை கல்விப் பயில வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
News September 4, 2025
சேலம் விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.