News August 31, 2025

காய்ச்சலை விரட்டும் ‘சீந்தில் தேநீர்’

image

இந்த மழைக்காலத்தில் பலரும் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி போன்ற பிரச்னைகளால் கடும் அவதிப்படுவார்கள். அவர்கள் சீந்தில் தேநீரை பருகும்படி சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீந்தில்கொடி இலை, சுக்கு, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். அதனை வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், சுவையான சீந்தில் தேநீர் ரெடி. SHARE IT.

Similar News

News September 4, 2025

செப்டம்பர் 4: வரலாற்றில் இன்று

image

*1825 – தாதாபாய் நெளரோஜி பிறந்தநாள்.
*1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், தான் கண்டுபிடித்த படம்பிடிக்கும் கருவிக்கு ‘ஈஸ்ட்மேன் கோடாக்’ என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
*1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
*1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2007 – தமிழ் திரைப்பட நடிகை குமாரி ருக்மணி நினைவுநாள்.

News September 4, 2025

பைக், ஆட்டோ, கார்களின் விலை குறைகிறது

image

GST சீர்திருத்தங்களின் அடிப்படையில் மோட்டார் வாகனங்களுக்கான வரம்பு 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,
*1,500 cc-க்கு மிகாத டீசல் கார்கள்.
*ஆம்புலன்ஸ்
*ஆட்டோ உள்பட 3 சக்கர வாகனங்கள்.
*1.200 cc-க்கு குறையாத Hybrids.
*மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள்.
*வாகனங்களின் பாகங்கள்.
*350 cc-க்கு குறைவான பைக்குகள்.

News September 4, 2025

GST குறைப்புக்கு பிஹார் தேர்தல் காரணமா? ப.சிதம்பரம்

image

தற்போது அறிவித்துள்ள GST சீர்திருத்தங்கள் 8 ஆண்டுகள் தாமதமானது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட X பதிவில், இந்த மாற்றத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். நாட்டின் மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் வீட்டுக்கடனா? குறைந்துவரும் வீட்டு சேமிப்பா? பிஹார் தேர்தலா? டிரம்ப், அவரது வரியா? அல்லது இவை அனைத்துமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!