News August 31, 2025
BREAKING : பரமக்குடி அருகே விபத்தில் 3 பேர் பலி

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் இருந்து குற்றாலம் சென்ற காரும், மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்த மினி லாரியும் இன்று (ஆக. 31) அதிகாலை 2 மணியளவில் பரமக்குடி நென்மேனி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் காளீஸ்வரன், ஜமுனா, ரூபினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Similar News
News September 3, 2025
ராமநாதபுரம்: ஆட்சியர் தகவல் அறிவிப்பு

ராமநாதபுரம், (செப்.9) முதல் அக்டோபர் 31 வரை 163-BNSS தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு நாள் (செப்.11) மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை (அக்.28,30) காரணமாக, சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News September 3, 2025
ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம், இயங்கும் அனைத்து உணவகங்களை இயக்கி வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் வகை தரத்திற்கு ஏற்ப உணவு பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தர சான்றிதழ் நிச்சயமாக பெற்று இருக்க வேண்டுமென அறிவிப்பு செய்துள்ளார். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியிட்டுள்ளார்.
News September 3, 2025
இராமநாதபுரம்: எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.