News April 9, 2024
முதல் படத்தில் மட்டும் தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும்

நடிகரின் வாரிசு என்பதால் முதல் படத்தில் மட்டும் தான் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என ப்ருத்விராஜ் தெரிவித்துள்ளார். தனது தந்தை சுகுமாரன் (மலையாள நடிகர்) மூலம் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறிய அவர், அதன் பிறகு கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். இந்த விஷயங்களை தான் நானும், துல்கர் சல்மானும் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Similar News
News November 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 6, ஐப்பசி 20 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை
News November 6, 2025
அமெரிக்கா பரிசோதித்த பயங்கர ஏவுகணை

கண்டம் விட்டு கண்டம் பாயும் Minuteman III பாலிஸ்டிக் ஏவுகணையை அமெரிக்கா பரிசோதித்துள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது 6,760 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடையது. சமீபகாலமாக, ரஷ்யா அணுசக்தியில் இயங்கும் ஆயுதங்களை பரிசோதித்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளது.
News November 6, 2025
எப்போது திருமணம்? மனம் திறந்த ரொனால்டோ!

கால்பந்து உலகின் GOAT கிறிஸ்டியானா ரொனால்டோ, தன் திருமணம் பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். உலகக் கோப்பை போட்டி முடிந்தபின், கோப்பையை கையில் ஏந்தியபடி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ரொனால்டோ – ஜார்ஜினா ஜோடி, கடந்த 10 ஆண்டுகளாக, 5 குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் என்கேஜ்மெண்ட்டை முடித்தவர்கள் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.


