News August 31, 2025
செட்டிகுளத்தில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர்

செட்டிகுளத்தில் பைக்கை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் நேற்று செட்டிகுளம் சென்ற அருண்குமார் (29) அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு SBI வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரது பைக்கை திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அருண்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைப் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News September 4, 2025
பெரம்பலூரில் பயங்கர தீ விபத்து

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று (செப்.04) காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதாரமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
News September 4, 2025
பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருனாளினி அறிவித்துள்ளார்.
News September 4, 2025
பெரம்பலூர்: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <