News August 31, 2025

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

image

பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி(43). இவா்,நிலத்தரகா் ஆக.28ம் தேதி பணி நிமித்தமாக பைக்கில் செய்யாறு – ஆற்காடு சாலையில் தூளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைத் தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில்,அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தாா். செய்யாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.

Similar News

News September 1, 2025

தி.மலை மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

“உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்” தி.மலை மாநகராட்சி மக்களுடன் சிறப்பு முகாம் நாளை செப்டம்பர் 02-ம் தேதி எஸ்.ஆர்.ஆதில் திருமண மஹால், அப்துல் படேல் ரசாக் தெரு, தி.மலை இடத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இம்முகாமில் நேரடியாக சமர்ப்பித்து, தீர்வுகளைப் பெறலாம். தி.மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறலாம்.

News September 1, 2025

தி.மலை: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

திருவண்ணாமலை மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்

News September 1, 2025

தி.மலை உள்ளாட்சித் துறையில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாது மலை, கலசப்பாக்கம், போளூர், புதுப்பாளையம், தெள்ளார், துரிஞ்சாபுரம், தி.மலை, வந்தவாசி, வெண்பாக்கம் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள இரவு காவலர், பதிவறை எழுத்தாளர், அலுவலக உதவியாளர் ஈப்பு ஓட்டுநர், ஆகிய பணிகளுக்கு (30 -9 -25) குள் விண்ணப்பிக்க விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது.

error: Content is protected !!