News August 31, 2025
வளர்ச்சியை பார்த்து EPSக்கு வயிற்றெரிச்சல்: TRP ராஜா

CM ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்து <<17564189>>EPS அறிக்கை<<>> வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் நிரூபித்து வருவதால், வயிற்றெரிச்சல் கொண்டு EPS பேசி வருவதாக அமைச்சர் TRB ராஜா சாடியுள்ளார். அறிக்கையில் EPS அரைத்த மாவையே அரைத்து, புளிப்பு காமெடி செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்: IMD வார்னிங்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(செப்.1) 40 – 60 KM வேகத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் அடுத்த 3 நாள்களுக்கு காற்று வீசும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள் கூறியதால் OPS இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் OPS தரப்பு 10 சீட்கள் வரை கேட்பதாகவும், கூட்டணி உறுதியான பின் மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.