News August 31, 2025

இவரே ODI கேப்டனுக்கு தகுதியானவர்: ரெய்னா

image

அடுத்த ODI உலககோப்பைக்கு இப்போது இருந்தே வலுவான அணியை உருவாக்க நினைக்கும் BCCI, ரோகித்துக்கு பதில் புதிய கேப்டனை தேட தொடங்கியுள்ளது. தகுதியான நபர் சுப்மன் கில்லா, ஸ்ரேயஷ் ஐய்யரா என BCCI யோசித்து வருகிறது. ஆனால், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவே ODI-க்கு சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் தோற்றத்தை ஹர்திக்கிடம் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News September 3, 2025

வைரஸ் பரவலுக்கு பயப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை

image

தமிழகத்தில் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் பரவவில்லை எனவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளூயன்சா பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 3, 2025

மிலாடி நபி விடுமுறை.. இன்று முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

image

மிலாடி நபி, வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு இன்று முதல் 5-ஆம் தேதி வரை 1,475-க்கும் அதிகமான பஸ்களும், 7-ஆம் தேதி பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 875 பஸ்களும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் குறிப்பிட்டுள்ளது.

News September 3, 2025

SCIENCE: இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமுடியுமா?

image

இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி அதற்கு மீண்டும் உயிர் கொடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. Cryonics என அழைக்கப்படும் இந்த முறையில், இறந்தவர்களின் உடலில் உள்ள உறுப்புக்கள் முதலில் பதப்படுத்திவைக்கப்படுகிறது. இறந்த உடல்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கான வழியை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இதுவரை 500 உடல்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!