News August 31, 2025
பென்ஷன் கேட்டு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஒப்புதல் கிடைத்தால், தன்கருக்கு மாதம் ₹42,000 ஓய்வூதியம் கிடைக்கும். உடல்நலக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு, தன்கர் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Similar News
News September 3, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் சசிகலா, OPS.. புதிய தகவல்

சசிகலா, OPS உள்ளிட்டவர்களை சேர்த்து ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவர செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சசிகலாவை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, இன்றைய பேட்டியில் அவர் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் வலுத்துள்ளது. செப்.5-ல் தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க உள்ளதாக அவர் கூறுவது, ஒன்றுபட்ட அதிமுகவைத்தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News September 3, 2025
விராட் கோலிக்கு மட்டும் சிறப்பு அனுமதியா?

ஆஸி. தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தனது உடல்தகுதியை நிரூபித்துள்ளார். ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள Centre of Excellence-ல் உடற்தகுதி சோதனையில் பங்கேற்றனர். லண்டனில் வசிக்கும் கோலி அங்கேயே உடற்தகுதி சோதனை மேற்கொண்டுள்ளார். அவர் பிசிசிஐ-யிடம் சிறப்பு அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு வீரருக்கு சலுகை வழங்குவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 3, 2025
விஜய் சேதுபதியின் சம்பளம் ₹75 கோடி… எதற்கு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் விலகியதால் 8வது சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, விரைவில் தொடங்கவுள்ள 9வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த முறை ₹60 கோடி வாங்கிய விஜய் சேதுபதி, இம்முறை ₹15 கோடி சம்பளத்தை உயர்த்தி ₹75 கோடி கேட்டுள்ளாராம். இதற்கு தயாரிப்பு குழுவும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல்.