News August 31, 2025

TRAI பெயரில் போலி IVR மோசடி எச்சரிக்கை!

image

மதுரை மாநகர காவல் துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. TRAI அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி போலி IVR அழைப்புகள் செய்து, “உங்கள் மொபைல் எண் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படுகிறது, இல்லையெனில் முடக்கப்படும்” என மிரட்டி மோசடி செய்கிறார்கள். TRAI ஒருபோதும் OTP, தனிப்பட்ட தகவல், எண் சரிபார்ப்பு அல்லது துண்டிப்பு குறித்து அழைப்போ, செய்தியோ அனுப்பாது.

Similar News

News September 3, 2025

மூன்றாம் தரப்பு ஆப்கள் தவிர்க்கவும் – மதுரை காவல் துறை

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: மொபைல் மூலம் வங்கி தொடர்பான பண பரிவர்த்தனைகள் செய்யும்போது, உரிய வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு (third-party) ஆப்கள் மூலம் பணம் செலுத்துவது மோசடிக்கு வழிவகுக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சந்தேகம் ஏற்பட்டால் 1930 அழைத்து புகார் அளிக்கலாம்.

News September 3, 2025

மதுரை வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

image

மதுரை வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் முகாம் வரும் நாளை காலை 11 மணி முதல்
1 மணி வரை நடைபெறுகிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை உள்ள மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் மின் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மின் செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

விவசாயிகளுக்கு விரோதமாக திமுக அரசு உள்ளது – இபிஎஸ்

image

”தமிழகத்தில் ஹைட்ரோஉள்ளிட்ட கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க.,அரசு செயல்படுகிறது,” என மதுரை மாவட்டம், மேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், டங்ஸ்டன் திட்டத்திற்கு அதிமுக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே திட்டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!