News August 31, 2025
CM வேட்பாளர்! ராகுலுக்கு ஷாக் கொடுத்த தேஜஸ்வி

பிஹாரில் தேர்தல் அலை வீசி வரும் நிலையில் அங்கு இந்தியா கூட்டணியின் CM வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் முன்னிலையில், தன்னை முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவித்துக் கொண்டார். நிதிஷ் குமார் தன்னை காப்பி அடித்து திட்டங்களை நிறைவேற்றுதாக பேரணியில் பேசிய அவர், உங்களுக்கு Orginal CM வேண்டுமா? Duplicate CM வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 4, 2025
செங்கோட்டையனை சமாதானம் செய்யும் பாஜக?

அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனிடம் பேச, பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, டிடிவி என அடுத்தடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், நாளை செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கிறார். இது கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதும் பாஜக, செங்கோட்டையனை சமாதானம் செய்ய தீவிரமாக முயற்சித்து வருகிறதாம்.
News September 4, 2025
சற்றுமுன்: ஜெட் வேகத்தில் உயர்ந்த கட்டணம்

பண்டிகை காலம் என்றால் பஸ், விமான கட்டணங்கள் கிடு கிடுவென உயர தொடங்கிவிடும். அந்தவகையில், ஓணத்தையொட்டி சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – திருவனந்தபுரம் ₹4,359-ல் இருந்து ₹19,903-ஆக உயர்ந்துள்ளது. சென்னை – கொச்சி (₹3,713 – ₹11,798) சென்னை – கோழிக்கோடு (₹3,629 – ₹10,286), சென்னை – கண்ணூர்(₹3,655 – ₹9,923) என கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
News September 4, 2025
GALLERY: ஒரு படம்.. ஓராயிரம் அர்த்தங்கள்!

100 பக்கங்களில் விவரிக்க முடியாத ஒரு உணர்வை ஒரு சிறு போட்டோ உணர்த்தி விடும் என்பார்கள். சோஷியல் மீடியாக்களில் பகிரப்படும் மீம்ஸ்களும் அப்படித்தான். நம்மை பல நேரங்களில் சிரிக்க வைக்கும் இந்த மீம்ஸ்கள், அதே அளவு சிந்திக்கவும் தூண்டுகின்றன. ஒரே படம் என்றாலும், ஆழமான கருத்துகளை கொண்ட வைரல் மீம்ஸ் கேலரி உங்களுக்காக.. படங்களை Swipe செய்து பார்க்கவும்.