News August 31, 2025
‘பைசன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

‘பைசன்: காளமாடன்’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இதுவரை மாரி செல்வராஜ் இயக்கும் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த நிலையில், முதல்முறையாக நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
Similar News
News September 3, 2025
BREAKING: தங்கம் விலை Record படைத்தது

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹78,440-க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹9,805-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருகிராம் வெள்ளி விலை ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News September 3, 2025
ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
News September 3, 2025
TNPSC வினாத்தாளில் தவறு: நயினார் ஆவேசம்

ஐயா வைகுண்டரை பற்றி TNPSC வினாத்தாளில், ‘God of hair cutting’ என்று இழிவாகக் குறிப்பிடப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐயா வைகுண்டரை ‘முடிசூடும் பெருமாள்’ என மக்கள் அழைக்கும் நிலையில், மொழிப்பெயர்ப்பில் அவரது பெயர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன் தந்தை குறித்து இதேபோல் தவறாக குறிப்பிட்டால் CM பேசாமல் இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.