News August 31, 2025

கள்ளக்குறிச்சி: லாரி மோதி விபத்து

image

மா.பொடையூரை சேர்ந்த ராஜா விதை, சோளம் வாங்கி கொண்டு நேற்று தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காளசமுத்திரம் ஆட்டு பண்ணை அருகே எதிர் திசையில் வந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரகாஷ் மது போதையில் வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். இதனால் சுமார் 500 மீட்டர் இழுத்துச் சென்று ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 3, 2025

கள்ளக்குறிச்சி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது 0427-2451943 என்ற எண்ணை அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

கள்ளக்குறிச்சி: வழுக்கி விழுந்து பரிதாப பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த தெங்கியாநத்ததை சேர்ந்தவர் மல்லிகா (வயது 70). கடந்த ஓராண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி வீடு வாசலில் இருந்து வழுக்கி விழுந்து மயங்கினார். சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 3, 2025

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பெண் உயிரிழப்பு

image

கச்சிராயபாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற மாரியம்மாள், எதிரே வந்த சந்துருவின் இருசக்கர வாகனத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!