News April 9, 2024
மனைவியுடன் தகராறு – இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை

இலங்கையை சேர்ந்தவர் யுகேந்திரன்(29), கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். அதே முகாமை சேர்ந்த சுவாதியை திருமணம் செய்த யுகேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சுவாதி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு சுவாதியுடன் ஏற்பட்ட தகராறில் யுகேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 4, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 4, 2025
விழுப்புரம்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

விழுப்புரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விழுப்புரத்தில் மட்டும் 60 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 4, 2025
விழுப்புரம்: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

விழுப்புரத்தைச் சோ்ந்த சிறுவன் தனது நண்பா்களுடன் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விழுப்புரம் பானாம்பட்டு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த விமல் என்பவரின் மகன் சுஜித் (14). விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா் . அணைக்கட்டு பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


