News August 31, 2025
சென்னையில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒருவழி AC சிறப்பு ரயில் இன்று மட்டும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் மதியம் 12.45க்கு புறப்படும் இவ்வண்டி, காட்பாடி, சேலம் வழியாக இராஜபாளையத்தை நள்ளிரவு 23.57க்கு வந்தடையும். பின்னர் 23.59க்கு புறப்பட்டு, காலை 07.15க்கு திருவனந்தபுரம் வடக்கு அடையும். இந்த சேவை ஒருவழி மட்டுமே இயக்கப்படுவதுடன், முழுவதும் முன்பதிவு AC வண்டியாகும்.
Similar News
News September 3, 2025
சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <
News September 3, 2025
சென்னை: குறைந்த விலையில் வீடு வேணுமா?

வீடு என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு சென்னை மக்களே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு <
News September 3, 2025
மூன்று கவுன்சிலர்கள் நீக்கம் ரத்து

சென்னை, தாம்பரம், உசிலம்பட்டியைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்களை நீக்கிய தீர்மானத்தை மதராஸ் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முறையான நோட்டீஸ், விளக்கம் எதுவும் வழங்கப்படாத காரணத்தால் வழக்குகளை நான்கு வாரங்களில் மீண்டும் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு உள்ளூர் அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது