News August 31, 2025

தூத்துக்குடி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

image

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று(ஆக.31) நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்கள் செல்வதற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 உயர்ந்து ரூ.95 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது என கூறப்படுகிறது.

Similar News

News September 3, 2025

தூத்துக்குடி: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

image

1.<>இங்கு க்ளிக்<<>> செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSERID உருவாக்குங்க.
2.உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க.
4 கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க, இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்.
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) தெரியாதவங்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News September 3, 2025

தூத்துக்குடி எம்பிக்கு மேயர் ஜெகன் வாழ்த்து

image

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தந்தை பெரியார் விருது பெற உள்ளார். இந்த நிலையில் அவரை நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என பலர் உடன் இருந்தனர்.

News September 3, 2025

திருச்செந்தூர் கோயிலில் பூஜையில் முக்கிய மாற்றம்

image

சந்திர கிரகணம் செப். 7ஆம் தேதி நிகழவுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை, பிற்பகல் 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் முடிந்து மாலை 5 மணிக்கு கோயில் நடை திருக்காப்பிடப்படும். பிற்பகல் 2 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

error: Content is protected !!