News April 9, 2024
கார் கவிழ்ந்து 3 பேர் பலி

கோவில்பட்டி அருகே இலந்தைக்குளம் பகுதியில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சிவகாசி சென்று திரும்பியபோது, இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ரவீந்திரன், அவரது மனைவி ரமணி, தாயார் சேர்முகம் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
வரலாற்றில் இன்று

1099 – முதலாம் சிலுவைப் போர். 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ டோ காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1879 – அமெரிக்காவின் ஜென்னெட் என்ற கப்பல் தனது கடைசி ஆய்வுப் பயணத்தை வட துருவம் நோக்கி ஆரம்பித்தது. 2003 – சூடான் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர்.
News July 8, 2025
கழிவுகளை நீக்கும் லெமன் டீ

*எலுமிச்சையில் உள்ள நுண்சத்துகள் அழற்சியை தடுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் * இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட நுண்சத்துகள் மூளையை சுறுசுறுப்பாக்கி மனம் புத்துணர்வு பெறவும் மனஅழுத்தம் நீங்கவும் உதவுகிறது *வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, கொழுப்பு சேர்வதை தடுக்கிறது, இதனால் எடை குறையும் *உடலின் நச்சுகள், கழிவுகளை நீக்குவதால் நோய்கள் தடுக்கப்படும்.
News July 8, 2025
கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.